ஒப்பில்லா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஒப்பில்லா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சோமரசம்பேட்டை,
திருச்சி தீரன்நகரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஒப்பில்லா பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் சன்னதி, பரிவார தெய்வங்களான துதிக்கை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கம்பந்தடியான், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.