விதை சுத்திகரிப்பு நிலைய பணிகளை அதிகாரி ஆய்வு
விதை சுத்திகரிப்பு நிலைய பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி திருமானூரில் விதை சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விதை சுத்திகரிப்பு பணியினை விரைந்து முடித்து உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விதைகளை வழங்கிட ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கினார். இதையடுத்து திருமானூரில் உளுந்து வம்பன் விதைப்பண்ணையை பார்வையிட்டார். பின்னர் காரைப்பாக்கம் கிராமத்தில் கோடை எள் சாகுபடி வயல்களை பார்வையிட்டார். அப்போது, எள் பயிருக்கு எக்ேடருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட் நுண்சத்து இட அறிவுரை வழங்கினார். மேலும் எள் பயிரில் அதிக மகசூல் பெற 1 சதவீத டி.ஏ.பி. கரைசலை பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 10 நாட்கள் கழித்து இரண்டாம் முறையும் தெளித்து பயனடைய கேட்டுக்கொண்டார். பின்னர் பூண்டி கிராமத்தில் சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்துள்ள வயலினை பார்வையிட்டார். ஆய்வின்போது உதவி வேளாண்மை இயக்குனர் லதா, துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகேந்திரன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.