உலக பூமி தினத்தையொட்டி நல் ஏர் பூட்டிய விவசாயிகள்
உலக பூமி தினத்தையொட்டி விவசாயிகள் நல் ஏர் பூட்டினர்.;
ஆதனக்கோட்டை
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளன்று விவசாயம் செழிக்க நல் ஏர் பூட்டி விவசாயிகள் உழவுப் பணியை தொடங்குவது வழக்கம். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்கு தொண்டைமான்ஊரணி கிராமத்தில் உள்ள விவசாயிகள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நல் ஏர் பூட்டி வழிபட்டனர். காளை பூட்டி உழும் ஏர்கலப்பை இல்லாததால் எந்திர கலப்பையான டிராக்டர்களைக் கொண்டு உழுது உழவுப்பணியை தொடங்கி வயலினுள் இருந்த கல்லை சாமியாக கொண்டு அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு படையலிட்டு இந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்க பருவத்திற்கு நல்ல மழை பெய்ய வேண்டும், இயற்கை நல்ல முறையில் விவசாயத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உலக பூமி தினத்தை விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.