கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஆர்.56 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக தலைவர் வனராஜ் தலைமையில் துணைத்தலைவர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கபசுர குடிநீரை தலைவர் வனராஜ் வழங்கினார். உடன் மேலாளர் ராஜலிங்கம், மேற்பார்வையாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.