விபத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளி சாவு
விபத்தில் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள நிலையப்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (வயது 45), பாபு (48). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வேலை முடிந்து தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியபடியே பேசிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பெருமநாடு அருகே கீழபளுவஞ்சி என்னும் இடத்தில் வந்தபோது இருவரது மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து பாபு நேற்று திருச்சி தனியார் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.