ஆலங்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் செத்தன

தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் செத்தன.

Update: 2021-04-22 18:35 GMT
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள மெய்க்கேல்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. விவசாயியான இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு அவரது வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளின் கழுத்து பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் அவைகள் சம்பவ இடத்திலேயே செத்தன. ஆலங்குடி பகுதியில் உள்ள தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்