கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு
ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மற்றும் அவருடைய பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை
ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மற்றும் அவருடைய பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவியுடன் காதல்
கோவை சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் 20 வயது மாணவி, துடியலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
ஒருவருக்கொருவர் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அன்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர். மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியுடன் தினேஷ்குமார் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்தாக தெரிகிறது.
கர்ப்பமானார்
இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தினேஷ்குமாரிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
அதற்கு அவர் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்ததுடன், காதலியை பார்ப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.
மேலும் எனது வீட்டில் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்றுக்கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி, தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர் அவரை திட்டி அனுப்பியதாக தெரிகிறது.
வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தினேஷ்குமாரை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். அதற்கு அவர், இப்படி தொல்லை கொடுத்தால், நாம் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
எனவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவி, இது குறித்து கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் தினேஷ்குமார், அவருடைய தந்தை பழனிசாமி (56), தாய் சரஸ்வதி (54), உறவினா் கார்த்திக் (23) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.