தோகைமலை அருகே வெயிலின் தாக்கத்தால் ஆவி குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

தோகைமலை அருகே வெயிலின் தாக்கத்தால் ஆவி குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-22 17:50 GMT
தோகைமலை
ஆவி குளம்
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருந்தலூர் ஊராட்சி, சின்னரெட்டிப்பட்டி மலை அருகே ஆவி குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெள்ளப் பெருக்கெடுத்து தண்ணீர் நிரம்பும் இருக்கும். 
இதையடுத்து விவசாயிகள் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்வர். தற்போது குளத்தில் தண்ணீர் குறைந்ததால் விவசாயத்திற்கு தேவையான அளவு மதகு வழியாக தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஆயில் மோட்டார் மூலம் குளத்தில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். 
மீன்கள் செத்து மிதந்தன
தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதால், குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் நேற்று முன்தினம் திடீரென செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதையும், மீன்கள் எப்படி இறந்தது என்றும் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் செய்திகள்