தேடப்பட்ட கார் டிரைவர் கைது

இளையான்குடி அருகே 3 பேர் பலியான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-04-22 23:19 IST
இளையான்குடி,

இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் பேசி கொண்டிருந்த முருகன்(வயது 45), அவரது மகன் வீரகெவின் பிரகாஷ்(22), அதே ஊரை சேர்ந்த தாமோதரன்(26) ஆகியோர் மீது அந்த வழியாக வேகமாக தாறுமாறாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் பலியானார்கள். காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில் அவரை பிடிக்க துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த மாப்பிள்ளை சாமி மகன் ஞானபிரகாசம்(28) என ெதரிய வந்தது. அவரை நேற்று கோச்சடை கிராமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்