கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-22 17:49 GMT
உளுந்தூர்பேட்டை, 

  உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ராகுல் என்கிற ஏழுமலை (வயது 17). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று ராகுல் தனது நண்பருடன் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ராகுல் நீரில் மூழ்கினார்.
  இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி ராகுலை பிணமாக மீட்டனர். அப்போது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

   இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ராகுல் சாவு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்