நொய்யல்
கரூர் மாவட்டம் குட்டக்கடையிலிருந்து புன்னம் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.