53 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-22 17:13 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த கொரோனா கடந்த சில நாட்களாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ெகாரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள், மருத்துவமனைகளில் இருப்பவர்கள் என 428 பேர் சிகிச்சையில் உள்ளனர். 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்