கொரானா வார்டு அமைக்க கோரிக்கை
கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொரானா வார்டு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை,ஏப்
கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கீழக்கரையை சுற்றி நத்தம், கும்பிடு மதுரை, ஏர்வாடி, புல்லந்தை, மாயாகுளம், காஞ்சிரங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து கொேரானா வார்டு அமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.