திருப்பூர்
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பஸ் நிலையம், எம்.ஜி புதூர் ரோட்டில் கடந்த மார்ச் மாதம் 10ந் தேதி அன்று ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்து சென்ற விவகாரம் தொடர்பாக உடுமலை ஆத்துமேடு, பெரியபட்டியை சேர்ந்த மணிகண்டன் வயது 29 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மணிகண்டன் மீது அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மணிகண்டனை, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து சிறையில் உள்ள மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இதற்கான நகல் வழங்கப்பட்டது.