வாணியம்பாடியில் தினசரி காய்கறி கடைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு, வியாபாரிகள் போராட்டம்.

வாணியம்பாடி தினசரி காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-22 16:26 GMT
வாணியம்பாடி

காய்கறி கடைகள் இடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் தொடர்ந்து கொரானா தொற்று அதிகமாகி வருகிறது. இதனால் வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் இயங்கிவரும் உழவர் சந்தையை, நியூடவுனில் உள்ள அரசுக்கு சொந்தமான மைதானத்தில் அமைக்கவும், அதேபோல் வாரச்சந்தை மைதானத்தில் இயங்கிவரும் தினசரி கடைகளை, பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி காய்கறி கடைகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி மற்றும் வருவாய்துறையினர்  செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அந்த இடத்தில் கடைகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

வியாபாரிகள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை 6 மணி அளவில் தினசரி காய்கறி கடை உரிமையாளர்களும், வியாபாரிகளும் ஒன்றிணைந்து இடம் மாற்றம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் வாணியம்பாடி நகர போலீசாரும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து இரவு 9 மணி வரையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்