வாடிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
வாடிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் ஹரிசஞ்சய்(வயது 19). இவர் தனியார் கல்லுாரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். செல்லப்பா கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் குடும்ப வறுமையினால் ஹரிசஞ்சய்க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை.
அதனால் மன வேதனை அடைந்த ஹரிசஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.