தீயணைப்பு துறையினருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கும் விழா

தீயணைப்பு துறையினருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கும் விழா தேனியில் நடந்தது.

Update: 2021-04-22 15:47 GMT

தேனி:
தமிழகத்தில் தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றும் நபர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் தீயணைப்பு துறையில் பல ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய 24 பேருக்கு இந்த ஆண்டுக்கான முதல்-அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதில் பதக்க  பட்டியலில் இடம் பெற்றவர்களில் 16 பேர் ஓய்வு பெற்று விட்டனர். 8 பேர் தற்போது பணியில் உள்ளனர். 

இந்த பதக்கம் வழங்கும் விழா தேனி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் தலைமை தாங்கி, பதக்கங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பதக்கம் பெற்றவர்கள் தங்களின் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன், பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்