தொழிலாளியை எரித்து கொலை செய்த வழக்கில் செங்கல்சூளை உரிமையாளர் கைது

தொழிலாளியை எரித்து கொலை செய்த வழக்கில் செங்கல்சூளை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-22 15:39 GMT
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரின் எலும்புகளை வைத்து மரபணு சோதனை நடத்தப்பட்டது. 
இதில் இறந்தவர் கூடலூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான நாகராஜ் என்பதும், அவரது மனைவி முத்துமாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது செங்கல் சூளை உரிமையாளரான கம்பத்தை சேர்ந்த செல்வராஜுடன்(வயது 42) கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதனால் அவருடன் சேர்ந்து நாகராஜை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் முத்துமாரி கூறினார். இதையடுத்து போலீசார் முத்துமாரியை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த செங்கல் சூளை உரிமையாளர் செல்வராஜை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் க.புதுப்பட்டியில் பதுங்கியிருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் செய்திகள்