பந்தலூரில் சோதனைச்சாவடிகளில் தாசில்தார் திடீர் ஆய்வு
பந்தலூரில் சோதனைச்சாவடிகளில் தாசில்தார் திடீர் ஆய்வு நடத்தினர்.
பந்தலூர்,
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பந்தலூர் தாலுகாவில் தமிழக-கேரள எல்லையில் பாட்டவயல், நம்பியார்குன்னு, பூலக்குன்று, கக்குண்டி, தாளூர், மணல்வயல், கோட்டூர், சேரம்பாடி, நாடுகாணி போன்ற இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட சோதனைச்சாவடிகளில் பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது சோதனைச்சாவடிகளில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்து, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.