கோத்தகிரியில் உலக புவி தினத்தையொட்டி கருத்தரங்கு
கோத்தகிரியில் உலக புவி தினத்தையொட்டி கருத்தரங்கு நடைபெற்றது.;
கோத்தகிரி,
கோத்தகிரியில் உலக புவி தினத்தையொட்டி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதனையொட்டி கோத்தகிரியில் அக்கரை அறக்கட்டளை சார்பில் கோத்தகிரி ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலத்தில் கருத்தரங்கு மற்றும் களப்பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் கள இயக்குனர் வினோபா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- பூமி 6-வது அழிவை நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வெப்பநிலை 4 டிகிரி அதிகரிக்கும்.
தற்போது காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வன விலங்குகள் தற்போது குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக நடமாடுவதற்கு காரணம் புல் வெளிகளை அழித்து நிலத்தடி நீரை உறிஞ்சும் கற்பூரம் போன்ற அந்நிய மரவகைகளை நடப்பட்டதேயாகும்.
நம் போன்ற எளிய மக்கள் செய்யும் எளிய காரியங்கள்தான் இந்த பூமியைகாக்க உதவும் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ரைபிள் ரேஞ்சு நீரோடையிலிருந்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.