தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ராமநாதபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-22 13:46 GMT
ராமநாதபுரம்,ஏப்
ராமநாதபுரம் நொச்சிவயல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் விஜய் (வயது 20). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த அவர் கடந்த 2 மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரின் தாய் முருகவள்ளி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்