அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் கணினி மூலம் மூலமாக பணி ஒதுக்கீடு செய்தார்.

Update: 2021-04-22 13:43 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் கணினி மூலம் மூலமாக பணி ஒதுக்கீடு செய்தார்.
பணி ஒதுக்கீடு 
 மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். 
திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி திருப்பூர்-பல்லடம் சாலையில் அமைந்துள்ள எல்.ஆர்.ஜி. பெண்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 2ந்தேதி காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி
எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள உள்ள 136 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், 136 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் 150 நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கணினி மூலம் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஒதுக்கீடு செய்தார்.
மேற்படி பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல் முரளி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்