போதையில் ரகளை செய்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் குடிபோதையில் கடையில் உள்ள பொருட்களை அள்ளி வீசி ரகளையில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-04-22 13:42 GMT
ராமநாதபுரம்,ஏப்
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் குடிபோதையில் கடையில் உள்ள பொருட்களை அள்ளி வீசி ரகளையில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
போலீஸ்காரர்
ராமநாதபுரம் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் டிரைவாக பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் தங்கப்பாண்டி. இவர் நேற்று முன் தினம் குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வடக்கு 4-வது தெருவில் உள்ள நாகசேகர் (வயது 44) என்பவரின் மளிகை கடை மீது மோதியுள்ளார்.
இது குறித்து நாகசேகர் கேட்டபோது, அவரை தரக்குறைவாக பேசியதுடன் கையால் தாக்கி கடையில் இருந்த பொருட்களை ரோட்டில் அள்ளி வீசி சேதப்படுத்தியுள்ளார். மேலும், குடிபோதையில் சாலையில் படுத்து உருண்டு உள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக நாகசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பணியிைட நீக்கம்
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார். இதன்படி ராமநாதபுரம் ஆயுதப்படை ஆய்வாளர் சீமான் விசாரித்து நேற்று அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கபாண்டியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்