விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்
தாராபுரம் அருகே காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை எதிா்த்து போராடிய போது கைதான விவசாய சங்க நிா்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் அருகே காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை எதிா்த்து போராடிய போது கைதான விவசாய சங்க நிா்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக்கட்சி கூட்டம்
தாராபுரம் பழைய நகராட்சி வளாகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முத்துவிஸ்வநாதன் தலைமை தாங்கினாா். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-
தாராபுரத்தை அடுத்துள்ள சூாியநல்லூாில் சுஸ்லான் தனியாா் காற்றாலை நிறுவனம் போலீஸ் பாதுகாப்புடன் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த பணிகள் மாவட்ட நிா்வாகத்தின் தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ளது. எனவே மேல்முறையீடு முடியும்வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் இந்த பிரச்சினைக்காக போராடிய விவசாயிகள் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை செய்ய வேண்டும்
இ்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் 10 பேரை போலீசார் விடுதலை செய்துள்ளனர். ஆனால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளா் சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா் தனபால் ஆகியோரை மட்டும் சிறையில் அடைத்துள்ளனா்.
தமிழகத்தில் தற்போதுதான் தோ்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதுபோன்ற காபந்து அரசு அமலில் இருக்கும் சூழலில் இதுபோன்ற திட்டங்களை போலீசாா், வருவாய்த்துறை அதிகாாிகளுடன் சோ்ந்து கொண்டு நிறைவேற்றுவது ஜனநாயக விரோதம் ஆகும்.
எனவே திருப்பூா் மாவட்ட கலெக்டர் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாய சங்க நிா்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற்று அவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரகுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் தமிழ்முத்து, தமிழ்புலிகள் கட்சிமேற்கு மண்டல செயலாளா் ஒண்டிவீரன், நாம் தமிழா் கட்சி மாவட்ட தலைவா் சுரேஷ், தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளா் ஆரோன் செல்வராஜ், மாணவரணி அமைப்பாளா் சசிகுமாா் உட்பட பலர் கலந்து கொண்டனா்.
--
தாராபுர அருகே உயர் மின் கோபுரம் பணிகளுக்கு எதிர்த்துப் போராடிய விவசாயிகளை விடுதலை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை காண்பித்த போது எடுத்த படம்