கோவில்பட்டியில் உரடங்கு விதிகளை மீறிய 2 பேர் கைது

கோவில்பட்டியில் ஊரடங்கு விதிகளை மீறிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-22 11:36 GMT
 கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா தலைமையில் போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  கோவில்பட்டியை அடுத்துள்ள புதூர் லட்சுமியாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் அருகே, அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி கோவில் விழா கொண்டாடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக இதே பகுதியைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் வடிவேல் (வயது 37) மற்றும் தங்கவேல் மகன் ஆறுமுகசாமி ( 33) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்