தானேயில் பழம்பெரும் மராத்தி நடிகர் கொரோனாவுக்கு பலி
தானேயில் பழம்பெரும் மராத்தி நடிகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.;
தானே,
பழம்பெரும் மராத்தி நடிகர் கிஷோர் நந்லாஸ்கர் (வயது81). இவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதன்பேரில் டாக்டர்கள் அவரை தனிமைபடுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணி அளவில் அவர் கொரோனாவிற்கு பலியானார்.
இந்த தகவலை தானே மாநகராட்சி ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அதிகாரி சந்திப் மாலவி உறுதிபடுத்தி உள்ளார். உயிரிழந்த பழம்பெரும் நடிகர் கிஷோர் நந்த்லாஸ்கர் இந்தியில் வாஸ்தவ், ஜிஸ் தேஷ்மே கங்கா ரேத்தா ஹை ஆகிய திரைப்படங்களிலும், ஏராளமான மராத்தி படங்களிலும் நடித்து உள்ளார்.
இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.