மின்வாரிய ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்
கடையநல்லூரில் மின்வாரிய ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உதவி மின்வாரிய பொறியாளர் சின்னத்துரை தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, வாசுதேவநல்லூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் சேகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.