தென்காசியில் மேலும் 115 பேருக்கு கொரோனா
தென்காசியில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 857 பேர் வீடு திரும்பி உள்ளனர். 998 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரு பெண் இறந்தார். இதுவரை 166 பேர் இறந்துள்ளனர்.