இருமுறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

இருமுறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

Update: 2021-04-21 21:45 GMT
கோவை

கோவையை சேர்ந்த 55 வயது நபருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இதயத்தில் ஸ்டண்டு பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நபருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. 

இதனால் அவர் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி (டி.சி.பி.) சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது

2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்ட நபரை இதவியல் துறை தலைவர் டாக்டர் முனுசாமி, டாக்டர் நம்பிராஜன் மற்றும் மருத்துவ குழுவினர்  பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு இன்ஸ்டன்ட் ரெஸ்டெனோசிஸ் (ஐ.எஸ்.ஆர்.) என்ற ரத்த குழாய் சுருக்க நோய் இருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து அவருக்கு மருந்து பூசப்பட்ட பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது இதயதுறை தொழில் நுட்பத் தின் மிக முக்கிய வளர்ச்சியாகும். இதில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுபோன்ற சிகிச்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்