தென்காசியில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடக்கம்
தென்காசியில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா தொற்று நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மைய ெதாலைபேசி எண்ணான 04633 - 290548 அல்லது 1077 மற்றும் நோய்த்தொற்று தொடர்பான ஆலோசனைகளை 04633- 281100, 04633 -281102, 04633- 281105 ஆகியவற்றில் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.