நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் நேற்று மதியம் ஒரு சிறிய வகை விமானம் தாழ்வாக பறந்தது. இதை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் போராட்டத்தில் கலந்துகொண்டு கொண்டவர்களும், போலீசாரும் அந்த விமானத்தை ஆச்சரியமாக பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானம் எங்கிருந்து வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.