நெல்லை அருகே காட்டு ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை
நெல்லை அருகே காட்டு ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை நடந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கும்ப பூஜையும், காலை 9 மணிக்கு ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் பாளையங்கோட்டை ராமர் கோவிலிலும், நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.