நகைக்கடை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

நகைக்கடை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-21 19:50 GMT
தளவாய்புரம்,ஏப்.
தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ராஜபாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். 
இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக ஜெகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்