மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்,ஏப்
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தடையின்றி போடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதி, கீழரத வீதி சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழுவைச் சேர்ந்த திருமலை தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், மாதர் சங்கத்தைச் சேர்ந்த ரேணுகா தேவி, மாநில குழுவைச் சேர்ந்த மகாலட்சுமி மற்றும் பிச்சைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.