தளவாய்புரம்,ஏப்
தளவாய்புரம் அருகே உள்ள முத்துசாமிபுரம் காமராஜர் நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரது அக்காள் மாலதி அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மாலதிக்கும், அவரது கணவருக்கும் இடைேய பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக மகேந்திரனுக்கும், செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் கத்தியால் மகேந்திரனை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த மகேந்திரன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.