போலீஸ்காரரை தாக்கியதாக மேலும் ஒருவர் கைது

போலீஸ்காரரை தாக்கியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-21 19:21 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராமராஜன் (வயது 31) என்பவர் நேற்று முன்தினம் அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு வழக்கு தொடர்பாக சம்மன் கொடுப்பதற்காக சென்றார். அப்போது ராமராஜன் அங்குள்ள சிலரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அப்துல் கலந்தர் என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் போலீஸ்காரரை தாக்கியதாக எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மைதீன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்