கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
விருதுநகர்,ஏப்
விருதுநகர் கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கேபிள் டி.வி. அதிபர்
விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 44). விருதுநகரில் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆபாச படங்களை அவரது கணவரான ெதாழிலதிபருக்கு செல்போன் மூலம் அனுப்பியதுடன், அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமலிருக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
குண்டர் சட்டம்
அந்த புகாரின் பேரில் பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரேம்குமார் தொடர் சைபர் குற்றங்களை மேற்கொண்டதாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் கண்ணன் கேபிள் டி.வி. அதிபர் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.