தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொண்டி புதிய பஸ் நிலையம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-04-21 19:12 GMT
தொண்டி,

 தொண்டி புதிய பஸ் நிலையம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகராஜ் தலைமை தாங்கினார். மலர், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவாடானை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். தற்காலிக தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். முககவசம், கிருமிநாசினி, கையுறைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் வள்ளி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்