வெள்ளாற்றில் மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

வெள்ளாற்றில் மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-04-21 18:57 GMT
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த நிலையூர் காட்டுக்குடி தெற்கு வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக சிலர் மணல் அள்ளுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழுவினர் காட்டுக்குடி வெள்ளாற்று பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த 5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்