பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்;
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வரும் இவர், அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் பழகி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 8 மாதம் கர்ப்பமடைந்ததாகவும், உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.