லாலாபேட்டை,
லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ராமநவமி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நேற்று ராமர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.