ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

Update: 2021-04-21 17:39 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 

ஏலத்திற்கு 128 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. 

அதன்படி முதல் தர 420 மூட்டை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.115.60 முதல் ரூ.128.40 வரை, 2-ம் தர 354 மூட்டை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.78 முதல் ரூ.110.35 வரை ஏலம் போனது. 

8 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட 7 மூட்டை அதிகமாக ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

தேங்காய் விலை உயர்வு காரணமாக கடந்த வாரத்தை விட ரூ.3.80-க்கு அதிகமாக ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்