சோளிங்கரில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

சோளிங்கரில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

Update: 2021-04-21 17:36 GMT
சோளிங்கர்

சோளிங்கர் பேரூராட்சி பிரகாஷ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஆண்கள் மூன்று பேரையும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற 3 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் சோளிங்கர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் தூய்மை பணியாளர்கள்  கிருமிநாசினி மருந்து தெளித்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் சம்பந்தப்பட்ட பகுதியை கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கூடுதல் இயக்குனர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்களிடம் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் அப்பகுதியில் தினமும் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் இயக்குனர் அண்ணாமலை உத்தரவிட்டார்.  அப்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்