சென்னாவரம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

சென்னாவரம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2021-04-21 16:54 GMT
வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று சென்னாவரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் முடிந்தது. 

ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு முறைகள் குறித்தும், கைகழுவும் முறை, சானிடைசர் பயன்படுத்தும் முறை, கபசுர குடிநீர் குடிக்க வேண்டியதின் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்.
 
ஊர்வலத்தில் பங்ேகற்ற தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். கிருமிநாசினி தெளிக்கும் எந்திரம் ஊர்வலத்தில் வந்தது. துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்