தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் கூடலூரில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2021-04-21 16:10 GMT
தேனி: 

தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு படையினர் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

இதற்கு தலைமை மருத்துவர் டாக்டர் முருகன் தலைமை தாங்கினார். 

கம்பம் தீயணைப்பு படை அலுவலர் அழகர்சாமி மற்றும் படைவீரர்கள் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். 

பின்னர் அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 


முகாமில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்