கோவை
கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். இவர் பணியில் ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.