உடன்குடி கந்தபுரத்தில் சாய்ராம் ஸ்ரீராமநவமி விழா
உடன்குடி கந்தபுரத்தில் சாய்ராம் ஸ்ரீராமநவமி விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகே யுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோவிலில் நேற்று ஸ்ரீராம நவமி விழாவையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மங்கள ஆரத்தி, கூட்டுப் பிரார்த்தனை, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், மலர் தூவிஅர்ச்சனை, கொடி ஊர்வலம், ஆகியன நடந்தது. ஏராளமான பக்தர்கள் முக கவசம், அணிந்து கொரோனா தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.