வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 17ந் தேதி 140 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 ஆண்கள், 3 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது,
இதையடுத்து கொரோனா தொற்று இருப்பவர்களை திருப்பூர், கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வெள்ளகோவில் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.