தாராபுரம்
தாராபுரமபொள்ளாச்சி ரோட்டில் தனியாா் நகை கடை அருகே பொிய புளியமரம் ஒன்று உள்ளது. அதில் 2 இடங்களில் மலை தேனீக்கள் கூடு கட்டி உள்ளன. அந்த பகுதியில் பேக்காிகள், வாகன விற்பனையகம், நகை கடை, ஜவுளி கடைகள் என ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. அதுபோன்று பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் வாகனங்கள், கடைவீதியில் இருந்து பொள்ளாச்சி, திருப்பூா், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் எப்போது வேண்டுமானாலும் கலைந்துசெல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும்பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை அந்த தேனீக்கள்
தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த தேனீக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.