வெறிச்சோடிய காதர்பேட்டை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வியாபாரிகள் வரத்து இன்றி காதர்பேட்டை வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வியாபாரிகள் வரத்து இன்றி காதர்பேட்டை வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
வியாபாரிகள்
திருப்பூர் ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோல் திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டையாகும். இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வருகிற வியாபாரிகள் ஆடைகளை பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பின் காரணமாக காதர்பேட்டையில் ஆடை வர்த்தகம் தொடர்ந்து மந்தமாக இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் காதர்பேட்டை வியாபாரிகள் வரத்து இன்றி காணப்படுகிறது.
வெறிச்சோடியது
இதுகுறித்து ஆடை வியாபாரிகள் கூறியதாவது
காதர்பேட்டையில் பல ஆண்டுகளாக ஆடை விற்பனை செய்து வருகிறோம். இந்த கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வெளிமாநிலங்களில் இருந்து வருகிற வர்த்தகர்கள் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பலரும் தினமும் திருப்பூருக்கு வருவார்கள். ஆடை வர்த்தகமும் நன்றாக இருக்கும். ஆனால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் காதர்பேட்டைக்கு வியாபாரிகள் வரத்து இன்றி வெறிச்கோடி காணப்படுகிறது.
தயாரித்து வைக்கப்பட்டுள்ள ஆடைகளும் விற்பனையாகாமல் தேக்கமடைந்தபடியே இருக்கின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் போன்றவைகளின் காரணமாக மிகுந்த கவலையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-------